டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 | தகுதி பெற்றவர்களுக்கு இன்று முதல் நேர்முகத்தேர்வு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு இன்று தொடங்குகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இன்று தொடங்கி வரும் 17ம் தேதி வரை, நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் தகுதி பெறும் தேர்வர்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2
கேள்விதாள் மாற்றி கொடுக்கப்பட்டதா? சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடியா? - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

முன்னதாக தமிழகத்தில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் நேர்முக தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வு மூலமாக 161 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒரு காலி பணியிடத்திற்கு மூன்று பேர் வீதமாக 483 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com