போட்டி தேர்வாளர்களுக்கு குட் நியூஸ் - டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வானது ஜூலை 13ம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
tnpsc group 1
tnpsc group 1pt

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வானது ஜூலை 13ம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 1 தேர்வானது, துணை கலெக்டர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி வணிகவரி ஆணையர், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து), துணை சரகப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை),மாவட்ட வேலைவாய்ப்பு, அலுவலர்மாவட்ட தீயணைப்பு, மற்றும் மீட்புப் பணித்துறை அலுவலர். ஆகிய பதவிக்காக இத்தேர்வானது நடத்தப்படுகிறது.

NGMPC057

இத்தேர்விற்கான வயது 21 லிருந்து 35 வயதுக்கொண்டவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி , விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வரி விதிப்பு சட்டங்களில்‌ டிப்ளமோ பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

tnpsc group 1
குரூப் 4 தேர்வு எப்போது? தேதி மற்றும் பிற விவரங்களை வெளியிட்டது TNPSC!

தமிழகத்தில் தகுதியை அடிப்படையாக கொண்டு பெரும்பாலான மக்களால் எழுத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் வருகின்ற ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த தேர்வுக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com