\
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்கோப்புப்படம்

டிஎன்பிஎஸ்சி | 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியீடு

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் குறித்த அட்டவணையை, தமிழ்நாடு அரசுப் பணியளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Published on: 

தமிழ்நாடு அரசுப் பணியளர் தேர்வாணையம் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் குறித்த அட்டவணையை வெளியிட்டுள்ளது.

குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டும் ஏப்ரல் மாதம் வெளியாகி, ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஏப்.25ல் வெளியாகி ஜூலை 13ல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press release
Press releasept desk

அதேபோல் குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு ஜூலை 15ல் வெளியாகி, செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அட்டவணையில் தெரிவித்துள்ளது. இது குறித்த அட்டவணையை tnpscgov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்வையிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
"நீட் தேர்வு | திமுகவின் வெற்று அறிவிப்பால் விலைமதிப்பில்லா உயிர்களை இழந்து வருகிறோம்" - இபிஎஸ்

குறிப்பாக தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது என்றும், ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கப்படலாம் அல்லது நீக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Time Table
Time Tablept desk
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
TNPSC குரூப் 4 | 2 ஆயிரத்திற்கும் மேல் கூடுதல் பணியிடங்கள் அதிகரிப்பு!

அதேபோல், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும், தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணையம் இளையதளத்தில் (WWW.tnpscgov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com