‘இந்தி தெரியாதா..? திரும்பிப் போ’- பாதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவு

‘இந்தி தெரியாதா..? திரும்பிப் போ’- பாதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவு
‘இந்தி தெரியாதா..? திரும்பிப் போ’- பாதிக்கப்பட்ட தமிழருக்கு குவியும் ஆதரவு

‘இந்தி தெரியாதா..? தமிழ்நாட்டுக்கே திரும்பிப் போ’ என மும்பை விமான நிலைய அதிகாரி ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரிடம் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஆப்ரகாம் சாமுவேல். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பி.எச்டி செய்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து பாரீசுக்கு செல்லும் விமானத்தைப் பிடிக்க, குடியுரிமை சோதனை கவுன்ட்டருக்குச் சென்றார். அங்கிருந்த அதிகாரி சாமுவேலிடம் இந்தியில் பேசினார். அதற்கு பதிலளித்த சாமுவேல், தனக்கு இந்தி தெரியாது, புரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுமாறு கேட்டார்.

அதற்கு,‘இந்தி தெரியாதா...? தமிழ்நாட்டுக்கே திரும்பிப் போ..?’ என அந்த அதிகாரி கூறியதுடன், தமிழில் பதிலளிக்கும் வேறு கவுன்ட்டருக்கு செல்லுமாறும் கூறினார். இதையடுத்து விமானத்துக்கு நேரமானதால், வேறு கவுன்ட்டரில் சோதனை முடித்து, அமெரிக்கா புறப்பட்ட சாமுவேல், தனக்கு நேர்ந்தது குறித்து ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டார். தனது பதிவுகளை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் அனுப்பினார். 

இதையடுத்து, ஆப்ரகாம் சாமுவேலிடம் தவறாக நடந்து கொண்ட அதிகாரி மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, சாமுவேல் விவகாரத்தில் சமூக வலைத்தளத்தில் ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன. தேசத்தால் இந்தியர், முதலில் தமிழர், அப்படியிருக்க இந்தி தெரிந்திக்க வேண்டுமா..? என சிலர் சாமுவேலுக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர். தமிழகத்துக்கு வரும் வடஇந்தியர்களுக்கு தமிழர்கள் என்ன இந்தி அல்லது ஆங்கிலத்திலா பதில் அளிக்கிறார்கள், அவர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று சிலர் எதிர்ப் பதிவிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com