கொரோனாவால் மருத்துவமனையில் இருக்கும் கணவர்: ரகசியமாக மது கொடுத்த மனைவி !
சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முத்துக்குமரன் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை கடந்த புதன்கிழமை அன்று மருத்துவமனைக்குச் சென்ற அவரது மனைவி கலைமங்கை உணவு அடங்கிய பை ஒன்றை அவருக்கு கொடுத்துச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் முத்துக்குமரன் வார்டுக்குள்ளேயே ரகளையில் ஈடுபட்டுள்ளார். வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் கலக்கம் அடைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மருத்துவர் உட்பட மருத்துவமனை ஊழியர்களும், அந்த பகுதியின் கிராம நிர்வாக அதிகாரியும் விசாரித்த போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதோடு அவருக்கு மதுவை உணவு பையில் அவரது மனைவி வைத்துக் கொடுத்தார் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
அதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் முத்துக்குமாரன் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.