நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 21.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் 17.93%, நகராட்சிகளில் 24.53%, பேரூராட்சிகளில் 28.42% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அரியலூரில் 30.79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் காலை 9 மணி வரை 3.96 சதவிகித வாக்குகளே பதிவானநிலையில், 11 மணியளவில் 17.88 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 11 மணி நிலவரம்
அரியலூர் - 30.79%
செங்கல்பட்டு - 10.65%
சென்னை - 17.88 %
கோயம்புத்தூர் - 21.04 %
கடலூர் - 25.40%
தருமபுரி - 26.76%
திண்டுக்கல் - 28.531%
ஈரோடு - 21.64%
கள்ளக்குறிச்சி - 28.97%
காஞ்சிபுரம் - 26.56%
கன்னியாகுமரி - 22.86%
கரூர் - 29.23%
கிருஷ்ணகிரி - 23.41%
மதுரை - 17.91 %
மயிலாடுதுறை - 21.93%
நாகப்பட்டினம் - 23.52%
நாமக்கல் - 30.52%
பெரம்பலூர் - 25.49%
புதுக்கோட்டை - 26.98%
ராமநாதபுரம் - 23.60%
ராணிப் பேட்டை - 21.00 %
சேலம் - 27.60%
சிவகங்கை - 23.02%
தென்காசி - 28.60%
தஞ்சை - 18.09%
தேனி - 27.28%
நீலகிரி - 20.87%
தூத்துக்குடி - 21.51%
திருச்சிராப்பள்ளி - 29.10 %
நெல்லை - 23.92%
திருப்பத்தூர் - 16.67%
திருப்பூர் - 16.88%
திருவள்ளூர் - 19.76%
திருவண்ணாமலை - 23.23%
திருவாரூர் - 26.45%
வேலூர் - 20.77%
விழுப்புரம் - 28.89 %
விருதுநகர் – 28.46%