\
தமிழகத்தின் 14 இடங்களில் புதிய பேருந்து நிலையம்!

தமிழகத்தின் 14 இடங்களில் புதிய பேருந்து நிலையம்!

தமிழகத்தின் 14 இடங்களில் புதிய பேருந்து நிலையம்!
Published on

திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 14 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டப்பேரவையில் இன்று திருச்சியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையப் பணிகள் எப்போது நிறைவடையும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என். நேரு கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருச்சி ஸ்ரீரங்கம், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 14 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com