சிபிஎஸ்இ-க்கு நிகரான பாடத்திட்டம்: தமிழக அரசு அரசாணை

சிபிஎஸ்இ-க்கு நிகரான பாடத்திட்டம்: தமிழக அரசு அரசாணை
சிபிஎஸ்இ-க்கு நிகரான பாடத்திட்டம்: தமிழக அரசு அரசாணை

சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றம் கொண்டு வருவதற்கான அரசாணை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ’சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். 2018-ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படும். 2019-ம் ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். 2020-ம் ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். பிளஸ்1, பிளஸ்2 தேர்வில் தேர்வு மதிப்பெண் 1200-லிருந்து 600 ஆகவும், தேர்வு நேரம் 2.30 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ்1, பிளஸ்-2 வுக்கு பின் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கும் இடைத் தேர்வில் தேர்வை எழுதலாம்.

முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்வு மூலம் ஆசிரியர்கள் தேர்வாகும் வரை தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். புதிய பாடதிட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்’ என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com