'நீட் தேர்வால் விரக்தி' - காணாமல் போன மாணவி பீகாரில் மீட்பு

'நீட் தேர்வால் விரக்தி' - காணாமல் போன மாணவி பீகாரில் மீட்பு
'நீட் தேர்வால் விரக்தி' - காணாமல் போன மாணவி பீகாரில் மீட்பு

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் கிடைத்த விரக்தியில் காணாமல் போனதாக கூறப்பட்ட சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி பீகாரில் மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் நம்மாழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் கோட்டீஸ்வரி கடந்த 2017ஆம் ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார். கடந்த முறை நீட் தேர்வு எழுதியதில் கிடைத்த மதிப்பெண்ணால் மருத்துவ சீட்டு கோட்டீஸ்வரிக்கு கிடைக்கவில்லை. இதனால் ஒராண்டு நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்து கொண்டு, மீண்டும் தேர்வு எழுதியுள்ளார். கடந்த 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவை பார்க்க செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வராததால், பெற்றோர்கள் தேடியுள்ளனர். கோட்டீஸ்வரி தன் செல்போன் மூலம் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என செய்தி மட்டும் அனுப்பியுள்ளார். போன் செய்து பார்த்த போது ரயிலில் செல்வதாகக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். பின் பெற்றோர் தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் கடந்த நீட் தேர்வை விட குறைவாக மதிப்பெண் எடுத்ததால், மருத்துவராக முடியவில்லை என மகள் வீட்டை விட்டு விரகதியில் சென்றுள்ளதாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

 போலீசார் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து பார்த்த போது, நெல்லூரில் கடைசியாக சிக்னல் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவி கோட்டீஸ்வரியை பீகாரில் உள்ள ஒரு ஒட்டலில் இருந்து மீட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com