கடந்த 10 ஆண்டுகளில் பல கோடி கடனில் மூழ்கிய அரசு போக்குவரத்து கழகம்: ஆர்.டி.ஐ.-ல் தகவல்

கடந்த 10 ஆண்டுகளில் பல கோடி கடனில் மூழ்கிய அரசு போக்குவரத்து கழகம்: ஆர்.டி.ஐ.-ல் தகவல்
கடந்த 10 ஆண்டுகளில் பல கோடி கடனில் மூழ்கிய அரசு போக்குவரத்து கழகம்: ஆர்.டி.ஐ.-ல் தகவல்

அரசு போக்குவரத்து கழகம், கடந்த 10 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் கடனில் முழ்கியுள்ளது என்பது ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்’ (ஆர்.டி.ஐ.) கீழ் தெரியவந்துள்ளது. அந்த தகவலறிக்கையில் வெளிவந்திருக்கும் தகவல்கள் இங்கே:

1. சேலம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.221 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 11 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது இதன் கடன் தொகை சுமார் ரூ.2172 கோடியாக உயர்ந்து உள்ளது.

2. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.227 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2247 கோடியாக உயர்ந்து உள்ளது.

3. மதுரை போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.266 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2178 கோடியாக உயர்ந்து உள்ளது.

4. கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூபாய்.339 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2478 கோடியாக உயர்ந்து உள்ளது.

5. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.586 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.2695 கோடியாக உயர்ந்து உள்ளது.

6. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2011ல் ரூ.370 கோடி என்றிருந்த கடன் தொகை, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது கடன் தொகை சுமார் ரூ.1555 கோடியாக உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com