மத்திய அரசின் நல்ல காரியத்தை பாராட்ட வேண்டும்: கடம்பூர் ராஜூ

மத்திய அரசின் நல்ல காரியத்தை பாராட்ட வேண்டும்: கடம்பூர் ராஜூ

மத்திய அரசின் நல்ல காரியத்தை பாராட்ட வேண்டும்: கடம்பூர் ராஜூ
Published on

ஸ்டெர்லைட் ஆலை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தேவையில்லாமல் போராட வேண்டாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேட்டுகொண்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உழவர் சந்தையில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு டிராக்டர் உள்ளிட்ட வேளாண் பொருள்களை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் “உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவில் 5 ஆண்டுகளாக தமிழகம் தான் முதலிடம் பெற்று வருகிறது. விவசாயிகளுக்கு 90 சதவீத மானிய விலையில் வேளாண் கருவிகள் வேளாண்மைத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக முதல்வர் நடவடிக்கை எடுத்து, ஆலைக்கான உரிமைத்தினை புதுப்பிக்கமால் ரத்த செய்துள்ளார். உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தான் ஆலை மூடப்பட்டுள்ளது. இதற்கு மேலும் போராட்டக்காரர்கள் தேவையில்லாமல் போராட வேண்டாம் என்பது அரசுக் கருத்து. இது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி விவகாரத்தில் நம்முடைய உரிமைகள் வழங்கப்படமால் இருப்பதை கண்டிக்கும் நேரத்தில் மத்தியஅரசு செய்த இந்த நல்லக் காரியத்தினை பாராட்ட வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பதனை பிரதமரிடம், முதல்வர் நேரில் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து, அழுத்ததினை கொடுத்துள்ளார் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com