ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது: மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது: மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது: மு.க.ஸ்டாலின்
Published on

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் இணைய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்திருப்பதும், தமிழக அரசு நிச்சயம் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜூம் கூறியிருப்பதும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்து விடக்கூடாது என்ற மக்கள் விரோத நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசுடன் அதிமுக அரசு கூட்டணி வைத்துள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் கூறியுள்ளார்.

எனவே மாநில உரிமையை விட்டுக்கொடுத்து பொதுவிநியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் இத்திட்டத்தில் இணையக்கூடாது என்றும், அவ்வாறு ஒரு முடிவு எடுக்கும் முன்பாக ஜனநாயக ரீதியாகக் கருத்துகளை கேட்கவேண்டும் எனவும் தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com