\
கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் கனமழையால் விரைவு ரயில்கள் வழக்கமான வேகத்தை விட குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com