மணல் தேவையா?: வெப்சைட் அல்லது ஆப்-இல் புக் பண்ணுங்க!

மணல் தேவையா?: வெப்சைட் அல்லது ஆப்-இல் புக் பண்ணுங்க!

மணல் தேவையா?: வெப்சைட் அல்லது ஆப்-இல் புக் பண்ணுங்க!
Published on

தமிழ்நாடு மணல் இணைய சேவைக்கான இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலியை (Mobile App) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த சேவை ஜூலை ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணைய சேவை மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும். இதனால் உபயோகிப்பாளர்களின் மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், மணல் தங்குதடையின்றி குறைவான விலையில் கிடைக்க வழிவகை ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது. மணல் பெற்றுக்கொள்ளவதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து, பொது மக்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு, மணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பயிற்சி அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல் தேவைப்படுவோர் www.tnsand.in இணையதளத்தின் மூலமும், tnsand செல்லிடப்பேசி செயலி மூலமும் புக் செய்யலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com