\
மழை சார்ந்த விபத்துகளில் பலி 5ஆக உயர்வு

மழை சார்ந்த விபத்துகளில் பலி 5ஆக உயர்வு

மழை சார்ந்த விபத்துகளில் பலி 5ஆக உயர்வு
Published on

தமிழகத்தில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்டம் பில்லாளிதொட்டி பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து லதா என்பவர் உயிரிழந்தார். ஸ்ரீமுஷ்ணம் அருகே உரம்பு என்ற இடத்தில் மின்சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ராமசாமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து நித்யா என்ற 9ஆம் வகுப்பு மாணவி பலியானார். முன்னதாக நேற்று சென்னை அனகாபுத்தூரில் மாடியில் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த லோகேஷ், கிஷோர் ஆகியோர் இடி தாக்கி உயிரிழந்தனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com