சவால் விட்டு லஞ்சம் வாங்கிய அதிகாரி: ஊழலுக்கு நடுவில் தான் பணி!

சவால் விட்டு லஞ்சம் வாங்கிய அதிகாரி: ஊழலுக்கு நடுவில் தான் பணி!

சவால் விட்டு லஞ்சம் வாங்கிய அதிகாரி: ஊழலுக்கு நடுவில் தான் பணி!
Published on

ஊழியர்களிடம் சவால்விட்டு லஞ்சம் பெற்ற தமிழகத்தின் மாநில கணக்காளர் அருண் கோயலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த அருண்கோயல் 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் மாநில கணக்காளர் பணியில் சேர்ந்து உள்ளார். மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தபோது தமிழ்நாடு மாநில கணக்காளர் கூட்டுறவு சேமிப்பு சொசைட்டியில் 68 கோடி பணம்  இருந்துள்ளது. இதில் 20 லட்சத்தை மாற்றி தருமாறு கேட்டு சங்க நிர்வாகிகளை கட்டாய படுத்தி உள்ளார். இதற்கு ஒத்துழைப்பு தராத நிர்வாகிகளை துறை ரீதியாகயும் தண்டித்து உள்ளார்.

நெடுஞ்சாலை துறை, மற்றும் பொது பணித்துறையில் உள்ள 165 கோட்ட மேலாளர்களை நியமனம் செய்வதில் ஒரு நபர்க்கு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை பணத்தை பெற்று கொண்டு பணி அமர்த்தி, அவர்களிடம் இருந்து கோட்டம் வாரியாக நடைபெறும் பொதுப் பணிதுறை பணிகளுக்கு மாதமாதம் லஞ்சம் பெற்று உள்ளார். அத்துடன் மாநில கணக்காளர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஸ்டோரில் பொருட்கள் வாங்காமல், தனியாரிடம் வாங்கி அதன் மூலம் லஞ்சம் பெற்று உள்ளார்.

மற்ற மாநிலத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கு பணத்தை போடுவார்கள், அதை மாநில கணக்காளர் ரிசர்வ் வங்கியில் செலுத்தி வந்தனர். அதனை மாற்றி தனியார் வங்கியில் போட்டு அதன் மூலம் கமிஷன் பெற்று உள்ளார். பழைய ஓய்வூதிய கோப்புக்களை கணினியில் மாற்றும் முறை நடைபெற்று வருகிறது. ஊழியர்களிடமே அந்த வேலையை வாங்கி கொண்டு தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கணக்கு காண்பித்து பணத்தை கையாடல் செய்து உள்ளார். அலுவலகத்தில் வேலை செய்யும் ஒப்பந்த பணியாளர்களின் மாதம் ஊதியத்தில் இருந்து சம்பளத்தை பிடித்தம் செய்து பணத்தை பெற்று உள்ளார்.

தமிழகத்தின் மாநில கணக்காளர் அலுவலகத்தில் ஜெய்பூரை சேர்ந்த அப்துல் அனீபாவை வேலை செய்வதாக கணக்கு காண்பித்து மாதந்தோறும் வந்து ஊதியம் பெறவைத்துள்ளார். அத்துடன் அருண் கோயலிடம் பணத்தை பெற்று கொண்டு, அவரது குடும்பத்தை கவனித்து வருவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய சிஏசி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாகவும், தற்போது சிபிஐ சோதனை நடத்துவது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். 

இதுவரை தங்கள் பணியில் இருந்தவர்கள் இது போன்ற தவறுகள் செய்தது இல்லை என ஊழியர்கள் வருத்தோடு தெரிவித்தனர். பணி செய்ய வாராமல் ஊழல் செய்யும் நோக்கதோடு வந்த அருண்கோயல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் கேட்டு கொண்டனர். சிபிஐ சோதனைக்கு வரவேற்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அருண்கோயலை சேர்த்து மூத்த கணக்காளர் கஜேந்திரன், திருவண்ணாமலை சேர்ந்த உதவி கணக்காளர் சிவலிங்கம், திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அதிகாரி ராஜா உள்ளிட்டவர்களையும் சிபிஐ கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com