தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் ஒப்பீடு- ஒரு பார்வை..!
தமிழக மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு வெறும் ஒரு இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வாக்கு சதவிகிதம் கடந்த மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக 44.3% வாக்குகளை பெற்ற நிலையில் தற்போது அது 18.49% ஆக குறைந்துள்ளது. திமுகவை பொறுத்தவரை கடந்த முறை 23.6% வாக்குகளை பெற்றிருந்த நிலையில், தற்போது 32.76% ஆக அதிகரித்துள்ளது.
பாஜக கடந்த முறை 5.5% வாக்குகளை பெற்ற நிலையில் தற்போது அது 3.66% ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் கடந்த முறை 4.3% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில் தற்போது 12.76% ஆக அதிகரித்துள்ளது. தேமுதிக கடந்த முறை 5.1% வாக்குகளை பெற்ற நிலையில் இம்முறை அது 2.19% ஆக குறைந்துள்ளது.
கடந்த முறை 4.4% வாக்குகளை பெற்றிருந்த பாமக இம்முறை 5.42% வாக்குகள் பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 2014 மக்களவைத் தேர்தலில் 12. 8 சதவிகித வாக்குகள் பெற்ற நிலையில், இந்த தேர்தலில் 24.62 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.