\
கிரேஸி மோகன் மறைவு : தலைவர்கள் இரங்கல்

கிரேஸி மோகன் மறைவு : தலைவர்கள் இரங்கல்

கிரேஸி மோகன் மறைவு : தலைவர்கள் இரங்கல்
Published on

கிரேஸி மோகன் மறைவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கிரேஸி மோகனின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது என்றும், அவரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இ‌ரங்கல் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், கிரேஸி மோகனின் மறைவு செய்தியறிந்து வேதனையடைந்ததாகவும், அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடை நாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய நகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த கிரேஸி மோகனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக பாஜக மூத்த‌ தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். பொறியாளர் மோகன் ‘கிரேஸி மோகனாக’ மாறி ‌தமிழ்த் திரையுலகில் தனக்கெ‌ன தனி முத்திரை பதித்தவர் என தமிழ்நாடு காங்கி‌ஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்‌ அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com