\
“வேறு மாவட்டங்களில் கிடந்து சிரமப்படுகிறோம்” - காவல்துறையினர் கண்ணீர்

“வேறு மாவட்டங்களில் கிடந்து சிரமப்படுகிறோம்” - காவல்துறையினர் கண்ணீர்

“வேறு மாவட்டங்களில் கிடந்து சிரமப்படுகிறோம்” - காவல்துறையினர் கண்ணீர்
Published on

தேர்தலையொட்டி வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட தங்களை, பழைய இடத்திலேயே மீண்டும் பணியமர்த்த வேண்டுமென்று, டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு காவல்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. அதில், 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய, தலைமைக் காவலர் முதல் ‌கண்காணிப்பாள‌ர்கள் வரையிலான 3 ஆயிரத்திற்கும்  திரும்பப்பெறப்பட்ட நிலையில், பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள், மீண்டும் பழைய இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. 

இந்நிலையில் இதுதொடர்பாக வேதனையை வெளிப்படுத்தியுள்ள காவலர்கள், பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், குடும்பத்தைப் பிரிந்து வேறு மாவட்டங்களில் சிரமப்படுவதாக கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகளுக்கு மனு அளித்துள்ள காவல்துறை அதிகாரிகள், டிஜிபி டிகே ராஜேந்திரனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல் அதிகாரிகளை மீண்டும் பழைய இடத்திலேயே பணியமர்த்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com