\
ஹெச்.ராஜாவின் தந்தை உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

ஹெச்.ராஜாவின் தந்தை உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

ஹெச்.ராஜாவின் தந்தை உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி
Published on

பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் உடலுக்கு தமிழக அரசு தரப்பில் அமைச்சர்‌கள் ஆர்‌.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். 89 வயதுடைய ஹரிஹரனின் உடல் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதற்கு முன் தமிழக அரசு சார்பாக வருவாய்துறை அமைச்சர் ஆர்‌.பி.உதயகுமார், கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஹரிஹரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com