"சாமியார் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது வேண்டாம்" - உதயநிதி வெளியிட்ட 8 பக்க அறிக்கை!

”சனாதன சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிகொள்வேன். சாமியார் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபடவேண்டாம்” - உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:

"நாங்கள் எந்த மதத்தினருக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதை கற்பிக்கும் மதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். கொலை மிரட்டல் விடுத்த சாமியார் மீது வழக்கு போதுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்றவை வேண்டாம்

சனாதன விவகாரத்தில் காற்றில் கம்பு சுற்றிக்கொண்டிருக்கின்றனர் பாஜக தலைவர்கள். சனாதனம் சர்ச்சை தொடர்பான அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொள்வேன். கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.

'சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா' என வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு, மோடி கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார்.

இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது என வடிவேலு அண்ணனின் 23ஆம் புலிகேசி கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com