\
நாளை பால் தட்டுப்பாடு இருக்காது: ராஜேந்திர பாலாஜி

நாளை பால் தட்டுப்பாடு இருக்காது: ராஜேந்திர பாலாஜி

நாளை பால் தட்டுப்பாடு இருக்காது: ராஜேந்திர பாலாஜி
Published on

தமிழகத்தில் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தால் பால் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிக அமைப்புகளும் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, போராட்டம் தேவையற்றது, ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கவே இது நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார். இந்த போராட்டத்தால் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர், போராட்டத்தில் பங்கேற்கும் பால் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com