\
மானிய விலை ஸ்கூட்டர்? இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை..

மானிய விலை ஸ்கூட்டர்? இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை..

மானிய விலை ஸ்கூட்டர்? இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை..
Published on

தமிழக அமைச்ச‌ரவைக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. 

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் நீட் விவகாரம், போக்குவரத்து பிரச்னை, மின்வாரிய‌ ஊழியர் விவகாரம்‌உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் ‌எடப்பாடி பழனிசாமி தலைமையில் இது‌வரை 6 அமைச்சரவைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு ‌அக்டோபர் 11ஆம் தேதி தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com