வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை பாதுகாப்புடன் ஜாக்கிங் சென்ற அமைச்சர்

வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை பாதுகாப்புடன் ஜாக்கிங் சென்ற அமைச்சர்
வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை பாதுகாப்புடன் ஜாக்கிங் சென்ற அமைச்சர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப் படை பாதுகாப்புடன்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜாக்கிங் பயிற்சி மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில், பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆசனூர் மலைப்பகுதிக்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனப் பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார் பாதுகாப்புடன் மா.சுப்பிரமணியன் ஜாக்கிங் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளும் உடன் ஜாக்கிங் சென்றனர். துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை போலீசார் பாதுகாப்புடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜாக்கிங் பயிற்சி மேற்கொண்ட வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com