வாட்ஸ் அப்ப தூக்கி போட்டுட்டு படிங்க : அமைச்சர் அட்வைஸ்
மாணவிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் செலுத்துவதை விட படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நாமக்கல் அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மின் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசினர் பெண்கள் கலை கல்லூரியின் பொன் விழா ஆண்டை ஒட்டி சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பெரியார் பல்கலை கழக தேர்வில் சிறப்பிடம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது இன்றைய விஞ்ஞான உலகில் மாணவிகள் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்துவதை கைவிட்டு, படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், அதோடு பெண்கள் படித்து விட்டு உடனடியாக திருமணம் செய்து கொள்வதை விட ஒரு வேலையை தேடி கொண்டு அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் என பேசினார்.