\
தஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது

தஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது

தஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது
Published on

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெண் சிற்ப சிலைகளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் உள்ள பெண் சிற்ப சிலைகளை வாலிபர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த திருச்சி, கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரத்தினவேலு என்பவர் அந்தக் குறிப்பிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். 

இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இச்செயலில் ஈடுபட்டது மதுரை ஒத்தகடையைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர்களுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சுற்றுலா வந்தபோது இதுபோன்ற புகைப்படங்களை எடுத்துள்ளார். 

மேலும், ரகுமான் திருச்சி செங்குளம் காலனியில் உள்ள அவரது அக்காள் வீட்டில் தங்கி உணவு விநியோக வேலையில் பகுதி நேரமாக ஈடுபட்டு வந்துள்ளார். ரகுமான் மீது பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டது, அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரைக் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com