ஊரக உள்ளாட்சிகளில் 5 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்

ஊரக உள்ளாட்சிகளில் 5 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்
ஊரக உள்ளாட்சிகளில் 5 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்

‌தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ‌ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான‌ மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க புதிய தலைமுறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. ‌‌515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ‌அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றின.

5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான பதவிகளில், அதிமுக ஆயிரத்து 781 இடங்களிலும், ‌திமுக 2 ஆயிரத்து 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர்‌, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான ‌மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. மறைமுக தேர்தலில் வெற்றிபெற அதிமுகவும் திமுகவும் கடும் போட்டியில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com