\
அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதிPT

”நாங்கள் ஆட்சி செய்கின்ற மாநிலத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசும் அவசியம் இல்லை” - அமைச்சர் ரகுபதி

”தமிழக அரசு மீதும், தமிழக மக்கள் மீதும் அவதூரையும் வெறுப்பையும் பரப்பி வருபவர் ஆளுநர்தான். நாங்கள் ஆளுநர் மீது வெறுப்பை பரப்பவில்லை. அவர் தான் ஊருக்கு ஊர் சென்று பிரசாரம் செய்கிறார்.” - சட்ட அமைச்சர் ரகுபதி
Published on: 

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசியதை அடுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளார்கள் கேள்விகளை எழுப்பினர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில், ”ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குற்றவாளியை கைது செய்துவிட்டோம். தமிழக அரசு மீதும், தமிழக மக்கள் மீதும் அவதூரையும் வெறுப்பையும் பரப்பி வருபவர் ஆளுநர்தான். நாங்கள் ஆளுநர் மீது வெறுப்பை பரப்பவில்லை. அவர் தான் ஊருக்கு ஊர் சென்று பிரசாரம் செய்கிறார். ஆனால் நாங்கள் ஆட்சி செய்கின்ற மாநிலத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசும் அவசியம் எங்களுக்கு இல்லை” என்று கூறுகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com