\
‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’என்ற பெயர் மாற்றும் பரிந்துரை நிராகரிப்பு

‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’என்ற பெயர் மாற்றும் பரிந்துரை நிராகரிப்பு

‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’என்ற பெயர் மாற்றும் பரிந்துரை நிராகரிப்பு
Published on

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்வது தொடர்பான மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், பெயர் மாற்றம் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம், உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போன்று இருக்கும் நீதிமன்றங்களான பம்பாய் உயர்நீதிமன்றம், கல்கத்தா உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், மெட்ராஸ் உயர்நீதிமன்ற அதிகார எல்லையில் தமிழ்நாட்டுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளதால், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வது முறையாக இருக்காது என நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com