\
13 கோரிக்கைகள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்

13 கோரிக்கைகள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்

13 கோரிக்கைகள்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் மா.சுப்பிரமணியன்
Published on: 

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து, தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் தொடர்பாக பேசவிருக்கிறார்.

நேற்று டெல்லி புறப்படும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அரசிடம் 13 கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு போதுமான தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், நீட் தேர்வு விவகாரம், மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் உள்ளிட்ட 13 விஷயங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேச இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com