தமிழ்நாடு
10 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து
10 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து
10 ஆம் ஆண்டில் பயணிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “10 வது ஆண்டு ஒளிபரப்பு சேவைகளில் வெற்றிகரமாக நுழைந்ததற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சியை பாராட்டுகிறேன். கொரோனா தொடர்பான செய்திகளை முன்னின்று தருவதற்கும், அண்மை செய்திகளை உடனுக்குடன் சிறப்பான பத்திரிகையாளர்களை கொண்டு வழங்குவதற்கும், சிறப்பான தொழில்நுட்பக்குழு மூலமாக செய்திகள் மற்றும் ஆய்வுகளை விரைவாக அளிப்பதற்கும் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்