கருவை சோதிக்கும் ஸ்கேன் சென்டர்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே எலவடை கிராமத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தார். கருவில் இருக்கும் சிசுக்களை கண்டறிந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதுதொடர்பாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். சித்தூரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பெண் சிசுக்களை கருக்கலைப்பு செய்வதாக அறியப்பட்டு வருகிறது என்றும், அதனை தடுக்கும் விதமாக இரு மாநில அரசுகளும் கூட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.