\
எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு: அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல்

எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு: அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல்

எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு: அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல்
Published on: 

தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதுகுறித்து விடுதியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com