\
அரசுடைமையானது ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம்!!

அரசுடைமையானது ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம்!!

அரசுடைமையானது ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம்!!
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் அரசுடைமையானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது

 வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகை ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியதன் மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் அரசுடைமையானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.

நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால்
நினைவு இல்லத்தில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com