`க்ளாஸ்ல டீச்சர் மொபைல் கேம் விளையாடறாங்க; நாங்க பாத்ரூம் கழுவணுமாம்’-பொங்கி எழுந்த சிறார்

`க்ளாஸ்ல டீச்சர் மொபைல் கேம் விளையாடறாங்க; நாங்க பாத்ரூம் கழுவணுமாம்’-பொங்கி எழுந்த சிறார்
`க்ளாஸ்ல டீச்சர் மொபைல் கேம் விளையாடறாங்க; நாங்க பாத்ரூம் கழுவணுமாம்’-பொங்கி எழுந்த சிறார்

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக புகார் தெரிவித்து கோவில்பட்டி அருகே பள்ளியை மூடி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டி கிராமத்தில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு பயிலும் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும், ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த மாணவர்களை தண்ணீர் எடுத்து வர சொல்வதாகவும், மேலும் பாடம் நடத்தாமல் ஆசிரியர்கள் செல்போனில் கேம் விளையாடி வருவதாகவும் தெரிவித்து, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆசிரியர்களை பள்ளிக்குள் விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லிவிட்டு, ஆசிரியர்கள் செல்ஃபோனில் கேம் விளையாடுவதாக எழுந்துள்ள இக்குற்றச்சாட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com