சி.ஆர்.சரஸ்வதிக்கு இறுதி அவகாசம் - அரசு தலைமை வழக்கறிஞர்

சி.ஆர்.சரஸ்வதிக்கு இறுதி அவகாசம் - அரசு தலைமை வழக்கறிஞர்
சி.ஆர்.சரஸ்வதிக்கு இறுதி அவகாசம் - அரசு தலைமை வழக்கறிஞர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்க அமமுக கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் இறுதி அவகாசம் வழங்கியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி, 18 எம்.எல்.ஏ க்கள் வழக்கில் ஒன்றரை வருடம் கழித்து தீர்ப்பு வழங்க எதற்கு நீதிமன்றம் விமர்சித்திருந்ததாக அதிமுக வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் 11 எம்எல்ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பே வழங்காத போது, எதற்கு நீதிமன்றம் என மிகவும் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறி, சி.ஆர்.சரஸ்வதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வேண்டும் என அவர் அரசு தலைமை வழக்கறிஞரிடம் கடந்த மே மாதம் மனு அளித்திருந்தார்.

நீதித் துறையின் மீது களங்கம் கற்பிக்க முயன்றதோடு, நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்த சி.ஆர் சரஸ்வதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சரஸ்வதி தரப்பில் விளக்கமளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்ற அவர், இறுதி அவகாசம் வழங்கி ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com