படிப்பை கைவிட்ட மாணவர்களிடம் உதவிக் தொகையை வசூலிக்க நடவடிக்கை: தமிழக அரசு

படிப்பை கைவிட்ட மாணவர்களிடம் உதவிக் தொகையை வசூலிக்க நடவடிக்கை: தமிழக அரசு

படிப்பை கைவிட்ட மாணவர்களிடம் உதவிக் தொகையை வசூலிக்க நடவடிக்கை: தமிழக அரசு
Published on

பழங்குடியின மாணவர்களுக்கான உதவித் தொகையை பெற்று, படிப்பை தொடராதவர்களிடம் இருந்து தொகையை திருப்பி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு கல்வி உதவித் தொகையில் ரூ.17 கோடியே 36 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக, தணிக்கை குழு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி கார்த்திகேயன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, இதுகுறித்து பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மை செயலாளர் டி.செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கல்வி உதவித்தொகை வாங்கிய பிறகு பல மாணவர்கள் படிப்பை தொடராமல் இடையில் நின்று விட்டதால், அரசுக்கு கோடிக் கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த தொகையை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து  திருப்பி வசூலிக்க மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்காத கல்வி நிறுவனங்கள்  இதுவரை  1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 320 ரூபாயை அரசிடம் திரும்பத் தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com