தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, கடந்த ஜூலை மாதம் முதல் 5 விழுக்காடு அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் 5 விழுக்காடு அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அகவிலைப்படி 12 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு உடனடியாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.