ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு
Published on

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஏற்கெனவே ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதற்கு வெளியிட்டுள்ள வழிமுறைகளுடன் தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக மேலும் சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது.


அதன்படி,

  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம்.
  • எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம்.
  • நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அளவிற்கேற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50%க்கும் மிகாமல் பார்வையாளர்கள் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுவர்.
  • போட்டியில் பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா இல்லை என்ற சான்று பெற்றிருக்கவேண்டும்.
  • நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com