தமிழ்நாடு
செப்.7 முதல் தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு
செப்.7 முதல் தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கமான ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்கழு கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செப்டம்பர் 7 ஆம் தேதி வட்ட தலைநகரங்களிலும், 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.