“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை

“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை

“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை
Published on

தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 7 வயது இரட்டைக் குழந்தைகளும், தமிழகம் முழுவதும் 13 பேரும் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், அமைச்சர்களும் அலட்சியமாக நடந்து வருவதால் மக்களின் உயிர் பறிபோகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். 

காய்ச்சலைத் தடுக்க அரசு தரப்பில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டெங்கு, பன்றி, எலிக் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான அவசரச் சிகிச்சைகள் அளிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் அரசை நம்பிக் கொண்டிருக்காமல், திமுகவின் மருத்துவர் அணி சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி, சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் கட்சியினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com