வருகிறது எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம்?
எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னையில் அதனை அமைப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த ஆணை, அரசிதழில் வெளியாகியுள்ளது. இதனிடையே சிறப்பு நீதிமன்றத்தை எங்கு அமைப்பது என உயர்நீதிமன்றம் இறுதிக்கட்ட முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றும் பணி நடந்துவரும் நிலையில், நீதிபதி நியமிக்கப்பட்ட உடன் நாள்தோறும் அவற்றின் மீதான விசாரணை நடைபெறும். தமிழகத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீது 178 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.