பிளாஸ்டிக் குப்பைகளுக்கு பரிசு கூப்பன் - தமிழக அரசு திட்டம்

பிளாஸ்டிக் குப்பைகளுக்கு பரிசு கூப்பன் - தமிழக அரசு திட்டம்

பிளாஸ்டிக் குப்பைகளுக்கு பரிசு கூப்பன் - தமிழக அரசு திட்டம்
Published on

நெகிழிப் பொருட்களை ஒழிக்கும் நோக்கில் நவீன மறுசுழற்சி குப்பைத் தொட்டி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கும் வகையில், ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம் மூலம் நவீன மறுசுழற்சி குப்பைத் தொட்டித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பொது இடங்களில் இந்த ஸ்மார்ட் குப்பைத் தொட்டியை வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். 

பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை உள்ளிட்டவற்றை இந்த ஸ்மார்ட் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு, பிளாஸ்டிக் பாட்டில்களைப் போடும்போது, சம்மந்தப்பட்டவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளும் இயந்திரம், அவருக்கு பரிசுக் கூப்பன் ஒன்றை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கூப்பனை பயன்படுத்தி குறிப்பிட்ட வணிக மையங்களில், விலை தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com