கச்சநத்தம் மோதல் : உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்!

கச்சநத்தம் மோதல் : உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்!
கச்சநத்தம் மோதல் : உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம்!

கச்சநத்தம் மோதலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கான நிவாரணத்தொகையை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் உள்ள கோயில் ஒன்றின் திருவிழாவில், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கச்சநத்தம் பகுதியில் வசிக்கும் சிலர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் உயிரிழந்தனர். அத்துடன் சுகுமார், மலைச்சாமி, தனசேகரன், மகேசுவரன், சந்திரசேகர், தேவேந்திரன் ஆகியவர்கள் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு, அரசு உரிய இழப்பீடு மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு அறிவித்திருந்த ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்தியுள்ளது. அத்துடன் காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரூ.1.5 லட்சத்தையும்,  ரூ.4 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com