“தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை” - கனிமொழி

“தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை” - கனிமொழி

“தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை” - கனிமொழி
Published on

மத்திய அரசைப் போலவே அதிமுக அரசும் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய அரசுப் பேருந்துகளில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி சில படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், “தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  மும்மொழிக் கொள்ளை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அதிமுக அரசும் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com