ஜெர்மனியின் சர்வதேச வளர்ச்சி மற்றும் திட்டமிடல் நிறுவனத்துடன் தமிழக அரசு கூட்டு உடன்படிக்கை செய்துள்ளது.
தமிழக அரசிற்கும், ஜெர்மன் நாட்டின் சர்வதேச வளர்ச்சி மற்றும் திட்டமிடல் நிறுவனத்திற்கும் இடையே நிலப்பயன்பாடு திட்டம்
மற்றும் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்த தொழில்நுட்பக் கூட்டு உடன்படிக்கை கையொப்பமானது. இதன்மூலம்
உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலை வசதிக்காக ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனத்திடம்
இருந்து ரூ.520 கோடி நிதி உதவி பெற தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் 2018ஆம் ஆண்டு ஜூலை
வரையில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று அரசு விளக்கமளித்துள்ளது. இந்த கூட்டு
உடன்படிக்கை, தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நிறைவேறியது. உடன்படிக்கையின்
ஆவணங்களில் தமிழக அரசு சார்பில் திட்டத்துறை செயலர் கிருஷ்ணன் கையொப்பமிட்டதாக தமிழக அரசின் செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.