\
தமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு

தமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு

தமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு
Published on

மாநில ஆட்சி மொழியை உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆதரிப்பதாக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

நீதிமன்ற தீர்ப்புகளையும், சட்டம் தொடர்பான செய்திகளையும் வெளியிட்டுவரும் சட்டக்கதிர் மாத இதழின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சட்டம் மற்றும் நீதி தொடர்பான மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

இந்த விழாவில், சமூக ஜனநாயகம் இருந்தால்தான் அரசியல் ஜனநாயகம் இருக்கும் என்றும், சமத்துவம் இல்லாவிட்டால் சுதந்திரம் முழுமையாக இருக்காது என்றும். உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கை அவர் ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com