தமிழ்நாடு
திருக்குறளில் இல்லாதது எதுவும் இல்லை: ஆளுநர் பேச்சு
திருக்குறளில் இல்லாதது எதுவும் இல்லை: ஆளுநர் பேச்சு
பொதுமறையான திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் குறித்து பல்வேறு அறிஞர்களின் கருத்துகளின் தொகுப்பான ‘திருக்குறள் களஞ்சியம்’ என்ற நூலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். முதல் பிரதியை ‘திருக்குறள் களஞ்சியம்’ நூல் தொகுப்பாளர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், பதிப்பாளர் பி.டி.டி. ராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூலை வெளியிட்டு பேசிய ஆளுநர் உலக பொதுமறையான திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்றும் ஒருவர் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள திருக்குறளை அவசியம் படிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார். நிர்வாகத்தில் இருப்பவர்கள் முதல் நீதிமான்கள் உள்பட ஆட்சியாளர்கள் வரை எப்படி செயல்பட வேண்டும் என்பதை சொல்கிற நூல் திருக்குறள் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

