
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்ள திமுக கிழக்கு மாநகர கழக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
ஆப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநர் அரசியல்வாதிகளை விட மோசமாக பேசி வருகிறார். கவர்னர் என்பதற்குரிய தகுதியை விட்டுவிட்டு மாநில அரசை விமர்சிக்கவும், திராவிட மாடல் என்பது காலாவதியாகிவிட்டது என்றும் இன்றைக்கு வேறு மாடல் என்றெல்லாம் ஒரு கவர்னர் அரசியல்வாதியை விட மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டி சட்டமன்றத்தில் நிறைவேற்றி தந்தால் அவற்றை அனுமதி அளிக்காமல் கவர்னர் நிலுவையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஒருபுறம் கவர்னர் என்றால், மறுபுறம் மத்திய அரசு. கடந்த முறை 39 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டார்கள். எப்படியாவது பத்து இடங்களிலாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் அதிமுகவை கையில் வைத்துக் கொண்டு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறார்கள். தவறு நடந்து விடுமா என கண்கொத்தி பாம்பாக அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர், இவர்கள் மீது தவறு சுமத்த முடியுமா என நினைக்கின்றனர். எனவே, ஒவ்வொன்றையும் பார்த்து செயல்பட்டு வருகிறோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்ன சலுகை கிடைக்க வேண்டுமோ அவை அத்தனையும் கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் புதியதாக எஸ்டிபிஐ கட்சி இணைய வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.