\
மறந்துபோன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்: தமிழ்த்தாய் வாழ்த்தை ஞாபகப்படுத்திய ஆளுநர்

மறந்துபோன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்: தமிழ்த்தாய் வாழ்த்தை ஞாபகப்படுத்திய ஆளுநர்

மறந்துபோன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்: தமிழ்த்தாய் வாழ்த்தை ஞாபகப்படுத்திய ஆளுநர்
Published on

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபா பட்டமளிப்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாட தவறியதை சுட்டிக்காட்டி ஆளுநர் அப்பாடலை பாட வைத்தார்.‌

இந்தி பிரச்சார சபையின் 81-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்‌‌வாரிலால் புரோஹித் கலந்து கொண்‌டார். நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கான ஆயத்தங்கள் தொடங்கின.

அப்போது குறுக்கிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு நிகழ்ச்சி‌யை தொடங்குமாறு விழா ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தினார். இதனையடுத்து மாணவ-மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com